ரவுடித்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- ஓசூரில் விவசாயிகள் போர்வையில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
- போலி அட்டைகள் வைத்திருப்பவர்களை அனுமதிக்க கூடாது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், ஓசூர் உழவர் சந்தையில் வெளியாட்கள் அட்டை இல்லாதவர்கள் போலியான அட்டை வைத்துள்ளவர்கள் சந்தைக்குள்வந்து வியாபாரம் செய்வது தடுக்கவேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே உழவர் சந்தையில் அட்டை வழங்கவேண்டும். உழவர் சந்தையில் ரவுடிகள் கடைவைத்து மிரட்டுவதை தடுக்கவேண்டும். ஒரே கடையை பலவருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாற்றவேண்டும்.
ஆடு, மாடுகள் சந்தைக்குள் வருவதை தடுக்க வேண்டும். குப்பைகளை, தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு நவீன சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். உழவர் சந்தையின் கடைகளை, அதிகப்படுத்த வேண்டும். உழவர்சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு வெளியில் நடைபாதையில் வைத்துள்ள கடைகளால் அதிகளவில் திருட்டு நடைபெறுகிறது, எனவே, கடைகளை அப்புறப்படுத்தி திருட்டுகளை தடுக்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து விலை மதிப்பீடு செய்து சந்தை முடியும் வரை இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.