உள்ளூர் செய்திகள்
கடையை மூடுவதில் தாமதம்- கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை
- சுரேந்தர் கடையை மூடிவிட்டு தாமதமாக வருவதாக கூறினார்.
- மனவேதனை நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
பெரவள்ளுர், ஜி.கே.எம் காலனி, 24-வது தெருவை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மனைவி நந்தினி (வயது33). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுரோந்தர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜி.கே.எம் காலனி 19-வது தெருவில் புதிதாக பேன்சி ஸ்டோர் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் நந்தினி செல்போனில் கணவர் சுரேந்தரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுரேந்தர் கடையை மூடிவிட்டு தாமதமாக வருவதாக கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.