உள்ளூர் செய்திகள்

தீப்பாஞ்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-04-05 09:59 GMT   |   Update On 2023-04-05 09:59 GMT
  • திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.
  • பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சி அம்மனுக்கு புதிய கோவில் கட்டுவதற்கு 18 பானை கவுண்டர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புதிய கோவில் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இதன் பின்னர் கோவில் கட்டும் பணி முடிவுற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு நடந்தது. அதனையொட்டி கடந்த 30-ம் தேதி வினாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து பக்கதர்களுக்கு கங்கனம் கட்டுதல் வீடுகளில் முளைபாரி இடுதல், 3 -ம் தேதி புதிய சாமி சிலைகள், கரிகோலக ஊர்வலம், மற்றும் தீப்பாஞ்சி அம்மன் மூலவர் விக்கிரஹகங்கள் யாக சாலைகளுக்கு கொண்டு வந்து அங்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை நான்கு கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் கோவில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் அந்தபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தீப்பாஞ்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் 18 பானை கவுண்டர்கள் உள்பட ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News