உள்ளூர் செய்திகள்

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டெருமை

Published On 2022-06-30 10:26 GMT   |   Update On 2022-06-30 10:26 GMT
  • குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
  • காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் குன்னூர் அருகே நான்சச் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் உணவு தேடி வந்த போது தவறி விழுந்து காட்டெருமை இறந்ததும், 8 வயது ஆண் காட்டெருமை என்பதும் தெரியவந்தது. இறந்த காட்டெருமை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தோட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News