உள்ளூர் செய்திகள்
அடையாள தெரியாத ஆண்பிணம்.
பட்டுக்கோட்டையில், அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- சிவக்கொல்லை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட பகுதியான பண்ணை வயல் சாலையில், மெயின் ரோட்டில் இடது புறத்தில் சிவக்கொல்லை பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க, ஊதா கலர் கட்டம் போட்ட கைலியும், பழுப்பு நிற கட்டம்போட்ட முழுக்கை சட்டையும் ஒரு வெள்ளை பனியன் பழுப்பு நிற ஜட்டி அணிந்த ஆண் பிரேதம் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் கண்ட றியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த நபர் பற்றிய விபரம் தெரிந்தால் பட்டுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரை தொடர்பு கொள்ளலாம்.