உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட முதியவரை படத்தில் காணலாம். 

கடலூர் கூத்தப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த முதியவர்

Published On 2022-08-08 14:09 IST   |   Update On 2022-08-08 14:09:00 IST
  • கடலூர் கூத்தப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் முதியவர் தவறி விழுந்தார்.
  • அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

கடலூர்:

கடலூர் கூத்தப்பாக்கம் அருகே சி .கே. சுப்பிரமணியன் நகர் உள்ளது. இந்த நகரில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை பள்ளத்தில் மூடி உடைந்த நிலையில் அது மூடப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று இரவு அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்துள்ளார். மேலும் அவர் பள்ளத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த பாதாள சாக்கடை பள்ளத்தை மூடி, அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News