உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு மருத்துவமனையில் பதிவு செய்ய நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு குவிந்ததால் பரபரப்பு

Published On 2023-09-25 10:20 GMT   |   Update On 2023-09-25 10:20 GMT
  • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மட்டும் கடந்த ஒரு வார மாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகள வில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்ட தில், 83 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கிடையே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயா ளிகள் கூட்டம் அலை மோதியது. இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட தங்க ளது குழந்தைகளுடன் வந்தி ருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) தெரி விக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 36 ேபர்கள் டெங்கு காய்ச்ச லால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

Tags:    

Similar News