உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் உருக்குலைந்து கடலூர் - சிதம்பரம் சாலையை படத்தில் காணலாம்.   

தொடர் மழையால் அவலம்: உருக்குலைந்து காணப்படும் கடலூர் - சிதம்பரம் சாலை

Published On 2022-11-23 07:57 GMT   |   Update On 2022-11-23 07:57 GMT
  • செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் .
  • மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது

கடலூர்:

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இவ்வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.  இது மட்டும் இன்றி கடலூர் அருகே சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடலூரில் இருந்து சிதம்பரம் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டு மானால் செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்

கடந்த சிலநாட்களாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் உருக்குலைந்தது. இதன் காரணமாக பிரதான முக்கிய சாலையாக இருந்து வரும் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள செல்லங்குப்பம் முதல் பச்சையாங்குப்பம் வரை சாலைகள் முழுவதும் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றது‌. தற்போது மழை கணிசமாக குறைந்து வெயில் அதிகரித்து காணப்படுவதால் சாலைகள் முழுவதும் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மண்கள் முழுவதும் பறந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் போது மண்கள் சிதறி முகத்தில் அடிப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகின்றது‌. மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விரைவில் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

இது மட்டும் இன்றி சென்னை நாகப்பட்டினம் பிரதான சாலை என்பதால் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சென்று வருவதற்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக செல்ல க்கூடிய அனைவருக்கும் கடும் உடல் வலி ஏற்படுவதோடு வாகனங்கள் முழுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அடிக்கடி டயர்கள் பஞ்சராகும் நிலையையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல் மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் மேலும் அதிகாரிகள் முதல் கட்டமாக சாலையை முழுமையாக போடா விட்டாலும் பரவாயில்லை தற்சமயத்திற்கு சாலை சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்வார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பிரதான சாலையாக இருந்து வரும் இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News