உள்ளூர் செய்திகள்

கொல்லிமலையில் ரூ.3 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா மையம் 3

Published On 2022-11-26 15:02 IST   |   Update On 2022-11-26 15:02:00 IST
  • காரவள்ளியில் இருந்து 70 குறுக்கிய கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்
  • சிறிய பஸ்கள், வேன்கள் மற்றும் கார்கள் மட்டுமே செல்ல முடியும்

கொல்லிமலை:

தமிழகத்தின் இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை விளங்கி வருகிறது.

கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, போட் ஹவுஸ், வியூ பாயிண்ட், பொட்டானிக்கல் கார்டன் போன்றவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.கொல்லிமலைக்கு காரவள்ளியில் இருந்து 70 குறுக்கிய கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த மலைப்பாதையை வழியாக பெரிய பஸ்கள் செல்ல முடியாது. சிறிய பஸ்கள், வேன்கள் மற்றும் கார்கள் மட்டுமே செல்ல முடியும்.அதேநேரத்தில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இந்தமலைப்பாதையில் செல்வதற்கு மிகவும் விரும்புகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வழக்கமான பஸ்களில் சுற்றுலா வருபவர்கள் இங்கு செல்ல முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் மதிவேந்தன், தற்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளதால், கொல்லிமலையை அகில இந்திய அளவில் சறிந்த சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையொட்டி கொல்லிமலையை பிரபலப்–படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள ஒரு தனியார் ரிசார்ட்டுகள் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடு செய்கின்றன.இயற்கை எழில் கொஞ்சும் மலையாக இருந்த போதிலும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாததால், இது போதுமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை. மூலிகை குணம் வாய்ந்ததாக கருதப்படும், ஆகாய கங்ககை நீர்வீழ்ச்சியில குளிப்பதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்இல்லை.மேலும், உடை மாற்றும் அறைகளோ அல்லது கழிப்பறைகளோ இல்லை. கொல்லிமலையின் பல இடங்களில் சமூக விரோதிகள் திறந்த வெளியில் அடிக்கடி மது அருந்துவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவறுப்பை தருகிறது.

வருகிற 2023-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அடுத்த 8 மாதங்களுக்குள் கொல்லி–மலையை, மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்–பட்டுள்ளன. இங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்த, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தற்போது ரூ.3 கோடி மதிப்பீட்டில் 13 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா ரிசார்ட் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இது கவர்ச்சியான முகாம் கூடாரங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகம் மற்றும் கேம்ப் பயர், ஜிப்லைன், ரோப் வாக்கிங் போன்ற சாகச விளையாட்டுகள் கொண்ட இடமாகவும் அமைய உள்ளது.தனியார் பங்களிப்புடன் சேர்ந்து, சர்வதேச தரத்திற்கு நிகராக ரோப் கார் வசதி, பல சாகச விளையாட்டு வசதிகள், பூங்காக்கள், இயற்கை குடில்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். மேலும் கொல்லிமலைக்கு மாற்றுப்பாதையாக அமைக்–கப்பட்ட முள்ளுக்குறிச்சி-நரியங்காடு மலைப்–பாதையை மேலும் விரிவுப்படுத்தி அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர வசதி செய்தால் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு எளிதாக வந்து செல்வார்கள் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Similar News