உள்ளூர் செய்திகள்

பயிற்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.


பண்பொழி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி

Published On 2022-06-16 14:27 IST   |   Update On 2022-06-16 14:27:00 IST
  • சிற்றாறு பாசன பகுதி விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
  • திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பங்களை எடுத்து கூறப்பட்டது.

செங்கோட்டை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசன பகுதியான பண்பொழி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார். உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி மண்வளம் மற்றும் பயிர்களில் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கூறினார்.

உதவி பேராசிரியை ரஜினிமாலா பயிர்களில் ஏற்படும் நோய் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறினார். வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உழவியல் தொழில்நுட்ப முறைகளை எடுத்து கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீர்வள, நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக் குமார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News