உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வங்கி லாக்கரில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Published On 2023-03-17 09:46 GMT   |   Update On 2023-03-17 09:46 GMT
  • தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர்.
  • இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்கணேஷ், சாமிநாதன்.

இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

இவர்கள், தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர். இதனால் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாகவே பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர்.

இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் இன்று கணேசன் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கு கும்பகோணம் பெசன்ட் சாலையில் ஒரு வங்கியில் உள்ள லாக்கர்களில், இவர்களுக்கு நகை அல்லது பணம் ஏதேனும் பத்திரபதிவு அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்த சான்றுகள் உள்ளதா என தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News