உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த தொழிலாளி பலி
- வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது50). அதே பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (38), ஆகிய இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மஞ்சமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தவறி சாலையில் விழுந்தனர். இதில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.