உள்ளூர் செய்திகள்

கைதான பட்டாசு ஆலை உரிமையாளர் குமார்.

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

Published On 2023-03-24 13:16 IST   |   Update On 2023-03-24 13:16:00 IST
  • ஆலை–யில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராமல் வெடித்தது
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

எடப்பாடி:

கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் அருகே உள்ள, முனியம்பட்டி கிராமம், சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளாளபுரம் வாணக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராமல் வெடித்து சிதறிய நிலையில், அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வேடப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல், விபத்து ஏற்படும் வகையில் பட்டாசு ஆலையை நடத்தி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தது தெரியவந்ததை அடுத்து ஆலையின் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News