உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

சீர்காழி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

Published On 2023-07-26 15:02 IST   |   Update On 2023-07-26 15:02:00 IST
  • கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
  • விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கிறது.

சீர்காழி:

சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வின்சிட்டி நகரில் , சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் உத்தரவுப்படி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

இந்த பணிகளை பார்வையிட வந்த கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் நடராஜன் மற்றும் மேலாளர் சதீஷ் ஆகியோர் கூறுகையில்:-

கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏல நடவடிக்கையில் வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொள்வதால், விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையினை விட கூடுதலான விலை கிடைக்கிறது.

மேலும் பருத்திக்கு உரிய விற்பனை தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் சங்கம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான சீர்காழி வட்ட பருத்தி விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.

இவ்வாறு சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் தற்போது வரை ரூ1 கோடியே 31 லட்சம் அளவிற்கு பருத்தி ஏலப்பணியினை மேற்கொண்டு, பருத்தி விவசாயிகளின் பொரு ளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது என்றனர்.

Tags:    

Similar News