உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேடசந்தூர் அருகே ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி

Published On 2022-08-07 07:04 GMT   |   Update On 2022-08-07 07:04 GMT
  • வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • தப்பி ஓடிய பெண்ணை சுகாதாரத் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிய அந்தப் பெண்ணும் அவரது கணவரும் பின்புறம் வழியாக தப்பி ஓடி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 108 வாகன டிரைவர் நரேஷ், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

ஆஸ்பத்திரியின் பின்புறமாக சென்று அந்த வழியாக இருவரும் தப்பி சென்றது தெரியவந்தது. ஆஸ்பத்திரி மூலம் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட தாடிக்கொம்பு சுகாதாரத் துறையினர் தப்பி ஓடிய பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டில் இல்லை.

தப்பி ஓடிய பெண்ணை சுகாதாரத் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News