உள்ளூர் செய்திகள்

சுற்றுலா ெதாழில் முனைவோர்களுடன் கலெக்டர் முரளிதரன் ஆலோசனை நடத்தினார்.

தேனியில் சுற்றுலா தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக்கூட்டம்

Published On 2022-11-06 12:23 IST   |   Update On 2022-11-06 12:23:00 IST
  • சுற்றுலாத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • சுற்றுலா தொழில் முனை வோர்களாக உருவாக்கிட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு சுற்றுலாத்துறையின் மூலம் தமிழகத்திலுள்ள சுற்றுலாத்தளங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி, சுற்றுலா ஆப்ரேட்டர், பூங்கா ஆப்ரேட்டர், சாகச சுற்றுலா ஆப்ரேட்டர் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறை களின்படி இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு பதிவு சான்றிதழ் இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் புதிதாக சுற்றுலா தொழில் முனை வோர்களை கண்டறிந்து அவர்களை சுற்றுலா தொழில் முனை வோர்களாக உருவாக்கிட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News