கூட்டத்தில் கலெக்டர் விசாகன் பேசினார்.
நிலவரி திட்ட கணக்கினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
- நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்யும் பணிகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் பதிவுகளை முழுமையாக சரியாக செய்து, முடிக்க வேண்டும். இப்பணியின்போது, பெயர், முதலெழுத்து மற்றும் பகுதி, சர்வே எண் என பல்வகை தவறுகளை தனித்தனியாக பிரித்து, அவைகளை சரி செய்திட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றும் நீங்கள் சமூகத்திற்கான அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். உங்களால்தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர முடியும். பட்டா வழங்குதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.