உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக சிறப்புரை நிகழ்வு

Published On 2023-07-21 15:27 IST   |   Update On 2023-07-21 15:27:00 IST
  • கல்லூரி முதல்வர் சீனி.திருமால்முருகன் கணிதத்தின் பயன்பாடுகள் பற்றியும்,கணிதம் எவ்வாறு வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
  • இறுதியாக இளம் அறிவியல் கணிதத்துறை மூன்றாமாண்டு மாணவி விக்னேஷ்வரி நன்றி கூறினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சீனிவாச நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் கணிதத்துறை யின் சார்பாக சிறப்புரை நிகழ்வு நடை பெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க மாக முதுநிலை இரண்டா மாண்டு கணிதத்துறை மாணவி தமிழரசி அனைவரையும் வரவேற்றார்.

அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனி.திருமால்முருகன் கணிதத்தின் பயன்பாடுகள் பற்றியும்,கணிதம் எவ்வாறு வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர்ஷோபா கணிதம் பயில்வதின் முக்கியத்துவத்தையும், கணிதத்துறையின் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி கணிதத்துறை உதவிப்பேராசிரியர் ஜோதிபாசு கலந்து கொண்டார்.

இந்நகழ்ச்சியில் கணிதத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இறுதியாக இளம் அறிவியல் கணிதத்துறை மூன்றாமாண்டு மாணவி விக்னேஷ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News