உள்ளூர் செய்திகள்

நாதல்படுகை கிராமத்தில் பழமையான கதவணையை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

திட்டு கிராமங்களில் தலா ரூ.3 கோடியில் 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை

Published On 2022-10-22 15:00 IST   |   Update On 2022-10-22 15:00:00 IST
  • நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு, வாடி ஆகிய கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.
  • கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் உள்ள கதவணை வழியே தண்ணீர் உள்ள விலை நிலங்களில் புகுந்துள்ளது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் வெள்ளத்தால், திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு, வாடி ஆகிய கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனால் திட்டுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்தில் உள்ள கதவணை வழியே தண்ணீர் வெளியேறி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் புகுந்துள்ளது.

இதனை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், நாதல் படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராம பகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் 2 புயல் வெள்ள பாதுகாப்பு மைய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுவருகிறது.

கொள்ளிடம் கரையோரப் பகுதியில் தண்ணீரால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கொள்ளிடம், ஆச்சாள்புரம், முதலைமேடுதிட்டு, அளக்குடி, காட்டூர், மகேந்திரபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யனாதன் ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, எம் எல் ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், உரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News