உள்ளூர் செய்திகள்

தடகள போட்டி வெற்றி பெற்ற திட்டசேரி அரசு பள்ளி மாணவர்கள்.

தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-11-24 09:26 GMT   |   Update On 2022-11-24 09:26 GMT
  • மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டபள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெ ற்ற தடகளப்போட்டி மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

14 வயதுக்கு உட்பட்ட வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், 17 வயது பெண்கள் பிரிவில் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் தடகளப் போட்டியில் ஈட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், தட்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று ள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாண விகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார்.

உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், உடற்க ல்வி ஆசிரியர் கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொ ண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News