உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஓசூரில் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-28 09:14 GMT
  • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் அக்னி பத் திட்டத்தை கண்டித்து, ஓசூரில் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். , மாநில காங்கிரஸ் செயலாளர் வீர.முனிராஜ், மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இதில், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர் .ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும் அக்னி பத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News