தண்டனை பெற்ற மணிகண்டன், அமிர்ஜான், சாகுல் ஹமித்.
7 மாதத்திற்குள் வழக்கை முடித்த வாழப்பாடி நடுவர் நீதிமன்றம்
- கடந்த ஆண்டு ஜூலை 2–ந் தேதி காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (வயது 62). இவரும் இவரது மனைவி ராஜாமணியும், கடந்த ஆண்டு ஜூலை 2–ந் தேதி காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்ததோடு, பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, சின்னசாமி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் காரிப்பட்டி காவல் ஆய்வாளர் (பொ) உமாசங்கர் தலைமை யிலான போலீசார் வழக்கு
பதிவு செய்தனர். அப்போ தைய எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்ராஜ், மோகன்,
சதிஸ்குமார், உதயக்குமார்
ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, சுற்றுப்புற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பயன்படுத்தி, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33). பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்ஜான் (34) மற்றும் செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் (53). ஆகிய 3 பேரையும் கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி கைது செய்தனர். இந்த கும்பலிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள், ரூ. 80,000 ரொக்கப்பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசா ரணை வாழப்பாடி நடுவர்
நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொள்ளையில் மணிகண்டன், அமிர்ஜான், செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் ஆகிய 3 பேருக்கும், இரு குற்றப் பிரிவுக்கும் தலா 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்ற நடுவர் சன்மதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 3 பேரும்,
கோயம்புத்துார் மத்திய
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விரை
வாக நடத்தி, பாதிக்கப்பட்ட வருக்கு பொருட்களை மீட்டு கொடுத்ததோடு சம்பவம் நடந்த 7 மாதத்திற்குள் ,குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த போலீசார் மற்றும் நீதிமன்ற நடுவருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.