உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற திப்பனப்பள்ளியை சேர்ந்த திலகா உதயகுமார் குழந்தைக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி பரிசுகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி

Published On 2023-07-23 14:59 IST   |   Update On 2023-07-23 14:59:00 IST
  • பிறந்த நாள் முதல் 6 வயது வரை அங்கன்வாடியில் கிடைக்கும் அனைத்து சேவைகளை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • இப்போட்டியில் 1 வயது முதல் 3 வயது வரையிலான 41 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நடைபெற்றது.

தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட குழந்தை களுக்கு மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பேசுகையில், குழந்தைகளில் முதல் 1000 நாட்களில் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டியானது நடத்தப்படுகிறது.

மேலும், பிறந்த நாள் முதல் 6 வயது வரை அங்கன்வாடியில் கிடைக்கும் அனைத்து சேவைகளை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் பேணுதல் குறித்த எந்த அளவிற்கு தெரிந்துள்ளார்கள் என்பதை அறியும் வண்ணம் இப்போட்டியானது நடத்தப்பட்டு ஆரோக்கிய குழந்தைகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்போட்டியில் 1 வயது முதல் 3 வயது வரையிலான 41 குழந்தைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திலகா உதயகுமாரின் ஒன்றரை வயது குழந்தை திலகாவிற்கு முதல் பரிசும், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த பவித்ரா சரத்குமாரின் ஒன்றரை வயது குழந்தையான ஏக்ஷிதாவிற்கு இரண்டாம் பரிசும், வேப்பனபள்ளி பவானியின் 10 மாத குழந்தையான தனுஜாவிற்கு மூன்றாம் பரிசும், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News