பாப்பாரப்பட்டியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
- பாப்பாரப்பட்டியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- முன்னால் சென்ற டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டதால் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் காயமடைந்து உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் துரைமுருகன் (வயது18). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துரைமுருகன் தனது உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பி.கொல்லப்பட்டிக்கு வந்தார். அங்கு அவரை வீட்டில் விட்டுவிட்டு பின்னர் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் ஜோனபாறை என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற டிராக்டரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் துரைமுருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அந்த டிராக்டர் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காய மமைடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக் கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.