உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
- சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
- விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்னகொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விக்ரம் (வயது17). இவர் கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறி வியல் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந் நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இதனால் விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.