உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

பெரியகுளம் சிறையில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

Published On 2023-10-21 04:19 GMT   |   Update On 2023-10-21 04:19 GMT
  • காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
  • அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

தேனி:

பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பெரியகுளம் சிறைச்சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் வருகை பதிவேடு, உள்வரும் மற்றும் வெளிசெல்லும் நபர்கள் குறித்த பதிவேடு, பார்வையாளர்கள் பதிவேடு, அலுவலர்கள் ஆய்வு பதிவேடு, தொகுதி பதிவேடு, கைதிகளின் அறை ஒதுக்கீடு பதிவேடு, காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கைதிகளுக்கு தயார்செய்யப்படும் உணவுக்கூடம், அடிப்படை வசதிகள், கைதிகளின் அறைகள் சுத்தமாவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வரும் பார்வையாளர்களிடம் சிறைச்சாலை போலீசார் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கெண்டார்.

Tags:    

Similar News