உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் யூனியன் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் நூலகம் சீரமைக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

கண்டமங்கலம் யூனியனில் ஊரக வளர்ச்சித்துறை திட்டபணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் மோகன் உத்தரவு

Published On 2022-06-15 09:47 GMT   |   Update On 2022-06-15 11:13 GMT
  • விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
  • இப்பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பனங்குப்பம் ஊராட்சியில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க–ப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பணி யினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கண்டமங்க–லம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.58 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு நூலகம் மாணவர்களுக்கும்ர பொது–மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவு புத்தகங்கள் வரவழைத்து வைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.14.37 லட்சம் மதிப்பீட்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் விவசாயப்பணிக்கு ஏற்ப பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவர்கள் பணி–யாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டு நன்றாக பராமரிக்க மருத்து––வர்களுக்கு அறிவுறுத்தி–னார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News