வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
நாமக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
- எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்த மங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதுகாப்பு அறையில் சுமார் 4216 எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்தி ரங்களும், 2622 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 970 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 7,806 எலக்ட்ரானிக் எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திர பாதுகாப்பு அறை சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக் கப்படு வதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மற்றும் தேர்தல் அலுவலர்கள், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.