உள்ளூர் செய்திகள்

கலெக்டர் முரளிதரன்

பெரியகுளத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-03 04:38 GMT   |   Update On 2022-07-03 04:38 GMT
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேனி:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம், சருத்தப்பட்டி, கீழவடகரை மற்றும் எண்டப்புளி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

லட்சுமிபுரம் ஊராட்சிப்பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் சீரமைப்பு பணி, ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சுகுழி மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி, ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் சுற்று வேலி அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்காலில் 50,000 முருங்கை கன்றுகள் நடவு செய்யும் பணி, ரூ.2.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் பட்டாளம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, ரூ.5லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் அமைக்கும் பணி.

சருத்துப்பட்டி ஊராட்சிப்பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி, 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லிபட்டி சாலை முதல் சருத்துப்பட்டி வரை வடிகால் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடை கட்டுமானப்பணி, கீழ ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப்பணி, எண்டப்புளி ஊராட்சிப்பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News