உள்ளூர் செய்திகள்

அமுதகொண்டப்பள்ளியில் டேன்பிளோரா மையத்தில் ரோஜா செடி நடவு, மலா் உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் பாா்வையிட்ட காட்சி.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2023-11-30 15:16 IST   |   Update On 2023-11-30 15:16:00 IST
  • மலா் அறுவடை, விற்பணை குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.
  • ரூ.17 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி, தாா்பாலின், வேளாண் இடு பொருள்களை வழங்கினாா்

கிருஷ்ணகிரி, 

ஒசூா் ஒன்றியம், ஈச்சங்கூா், அலசப்பள்ளி, பாகலூா் ஆகிய ஊராட்சி களில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.45 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் நடை பெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தாா்.

அமுத கொண்டப் பள்ளியில் டிட்கோ மற்றும் டேன்பிளோரா மையம் இணைந்து ரோஜா உள்ளிட்ட மலா் ஏற்றுமதி மையத்தை பாா்வையிட்டு, ரோஜா செடி நடவு, மலா் உற்பத்தி, ஏற்றுமதி பணிக ளுக்காக கொய்மலா் தயாா் செய்யும் பணிகள், குளிா்பதன கிடங்கில் மலா்கள் இருப்பு வைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை அவா் பாா்வை யிட்டாா்.

தொடா்ந்து அலசப்பள்ளி கிராமத்தில் ரூ.1 லட்சம் மானியத்தில் இயற்கை இடுபொருள் மண்புழு உரம், பஞ்சக்காவியம், ஜீவாமிா்தம், அமிா்த கரைசல், மீன் அமிலம் தயாரிப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பாகலூரில் மலா் உற்பத்தி பணிகள், மழைநீா் சேகரிப்பு, இயற்கை உரம் இடும் பணிகள் மற்றும் மலா் அறுவடை, விற்பணை குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.

ஈச்சங்கூா் ஊராட்சி, தாசரப்பள்ளி கிராமத்தில் பட்டு வளா்ச்சித் துறை சாா்பாக, விவசாயி முரளி என்பவா் தனது 1.5 ஏக்கா் விவசாய நிலத்தில் ரூ.1,50,500 மானியத்தில் மல்பெரி நடவு செய்துள்ளதைப் பாா்வை யிட்டு, விவசாயிடம் புழு வளா்ப்பு பணிகள், பட்டு கூடு உற்பத்தி பணிகள் மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தாா். சொக்க நாதபுரம் கிராம த்தில் ரூ.3,97,500 மதிப்பில் மானியம் பெற்று மல்பெரி நடவு செய்துள்ள பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஈச்சங்கூா் கிராமத்தில், ரூ. 17,50,000 மானியம் பெற்று ரோஜா, ஜொ்பரா உள்ளிட்ட மலா்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், எழுவப்பள்ளி கிராமத்தில் ரூ. 435 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பசுமை கூடாரம், பூங்கொத்து கட்டும் அறை மற்றும் மலா்களுக்கான குளிா்சாதன கிடங்கு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மாவட்ட கலெக்டர் அலசப்பள்ளி கிராமத்தில், வேளாண்மைத் துறை சாா்பாக, 10 பயனாளிகளுக்கு ரூ. 17 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி, தாா்பாலின், வேளாண் இடு பொருள்களை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, தோட்ட க்கலைத் துறை உதவி இயக்குநா்கள் சிவசங்கரி, உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Similar News