உள்ளூர் செய்திகள்

ராமநாயக்கன் ஏரி பூங்கா மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்துதல் பணிகளை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்த போது எடுத்த படம். 

ஓசூரில் ராமநாயக்கன் ஏரியை கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-09 15:24 IST   |   Update On 2023-03-09 15:24:00 IST
  • ரூ.23 கோடியே 42 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.
  • பத்தலபள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பஸ் நிலையத்திற்கான ராமநாயக்கன் ஏரி பூங்காவை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராமநாயக்கன் ஏரி பூங்கா, ஐ.டி.பார்க், புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் சர்வதேச மலர் ஏல மையத்தை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர், ஓசூரில் ராமநாயக்கன் ஏரி மற்றும் பூங்காக்கள், மாதிரி நகர திட்டத்தின் கீழ், ரூ.23 கோடியே 42 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டும்,

பழைய பூங்காவில் உள் நடைபாதை, யோகா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்து, நாள்தோறும் தூய்மை பணிகள் மேற்கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஓசூர் - பாகலூர் சாலையில், எல்காட் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் ஐ.டி.பார்க் பணிகளையும், பத்தலபள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பஸ் நிலையத்திற்கான ராமநாயக்கன் ஏரி பூங்கா,ஐ.டி.பார்க் உள்ளிட்ட இடங்களை, மாவட்ட கலெக்டர் நேரில் திடீர் ஆய்வு இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஓசூரில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மலர் ஏல மையத்தையும் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News