உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் முரளிதரன் குறைகளை கேட்டறிந்தார்.

யூனியன், வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-22 04:21 GMT   |   Update On 2022-09-22 04:21 GMT
  • வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
  • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தேனி:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை,

குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம்,

15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள்,

முடிவுற்ற பணிகள், அதற்கான பதிவேடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News