உள்ளூர் செய்திகள்

மொரப்பூரில் உள்ள அரசு மகளிர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

மொரப்பூரில் அரசு மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-08-10 10:28 GMT   |   Update On 2023-08-10 10:28 GMT
  • மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.
  • புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு தொட ர்ந்து புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் மொரப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மகளிர் விடுதிக்கு நேற்று திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மாவட்ட கலகெ்டர் சாந்தி விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா எனவும், விடுதியில் உள்ள உணவு இருப்பு வைப்பு, அறையில் இருப்பில் உள்ள பொருட்கள் குறித்தும் அவற்றின் கணக்கு வழக்குகள் குறித்தும், மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார்.

புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, ரங்கநாதன், மற்றும் உதவி பொறியாளர் அன்பழகன், விடுதி காப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News