உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்ைதகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்

Published On 2023-03-05 09:15 GMT   |   Update On 2023-03-05 09:15 GMT
  • 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர்
  • 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைத்த–ளாவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர். மேலும் 6 மாதம் முதல் 6 வயது உள்ள குழந்தைகளில் 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு கண்காணிப்பு அட்டைகள் வழங்கப்பட்டு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் எடுக்கப்பட்டு குழந்தைகள் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்ட–கத்தில் குழந்தை–களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உணவு 56 நாட்களுக்கு தினசரி ஒரு சதவீதம் உண்ணும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே தாய்மார்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணி குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வேலகுமாரி, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News