உள்ளூர் செய்திகள்

ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

சீர்காழி கடலோர பகுதிகளில் 3265 அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு-வனஅதிகாரி தகவல்

Published On 2023-01-08 15:59 IST   |   Update On 2023-01-08 15:59:00 IST
  • கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும் ஆமைக்கு ஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு,தொடுவாய்,திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்பு க்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும். இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் சேகரிக்கப்படும் முட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாகங்களில் பாதுகாக்கப்பட்டு 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும்

ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.

இந்த ஆண்டு தற்போது வரை 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக்குஞ்சு குறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இத்தகவலை சீர்காழி வனச்சரகர் டேனியல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News