உள்ளூர் செய்திகள்

விளைநிலங்களில் வெட்டப்பட்டுள்ள தென்னை மரங்கள்.

வடமதுரை, அய்யலூர் பகுதியில் வறட்சியால் வெட்டப்படும் தென்னை மரங்கள்

Published On 2023-01-01 11:05 IST   |   Update On 2023-01-01 11:05:00 IST
  • தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்
  • போதிய தண்ணீர் கிடைக்காததால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு தக்காளி, வெண்டைக்காய், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக ெதன்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க போராடியும் வருகின்றனர். பயிரிடப்படும் காய்கறிகள், தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான தென்னந்ேதாப்புகள் பிளாட்டுகளாக மாறிவிட்டன.

மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தாலும் இப்பகுதியில் வறட்சியான சூழலே நிலவுகிறது. மேலும் தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் சிறியஅளவு தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதைபார்க்கும் போது விவசாயிகளின் நிலைமை கண்ணீர் வரவழைக்கும் சூழ்நிலையில் உள்ளது தெரியவருகிறது.

எனவே அரசு இவர்களுக்கு உதவவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News