உள்ளூர் செய்திகள்

பேடரஅள்ளி பஞ்சாயத்தில் இலவசமாக தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்த காட்சி.

நல்லம்பள்ளி பகுதியில் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-09-08 15:01 IST   |   Update On 2023-09-08 15:02:00 IST
  • நிகழ்ச்சியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
  • 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங் கப்பட உள்ளது.

தொப்பூர், 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பேடறஅள்ளி மற்றும் எச்சனஅள்ளி பஞ்சாயத்தில் இலவசமாக தென்னங்கன்று வழங்கும் நிகழ்வினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரிதி நிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பு ஆண்டில் பேடர அள்ளி, எச்சனஅள்ளி, கோணங்கி அள்ளி, பூதன அள்ளி, மாதேமங்கலம், கம்மம்பட்டி ஆகிய 6 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து களில் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் தென்னங் கன்று ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் 300 குடும்பங் களுக்கு 2 கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் கடப்பாறை, மண்வெட்டி, அறுவாள், பாண்டல் மற்றும் களைக் கொத்தி ஆகியவற்றை உள்ள டக்கிய வேளாண் பண்ணை கருவிகள், கைதெளிப் பான்கள், வரப்பு பயிராக பயிர் வகை விதைகள் விவசா யிகளுக்கு 50% மானியத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சா யத்துகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் குறைந்த பட்சம் 8 பயனாளிகளை கொண்ட 10 ஏக்கர் நீர் ஆதாரமற்ற மானாவாரி தரிசுநில தொகுப்பு தேர்வு பணி செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் தொகுப்பில் நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைத்து அந்த தொகுப்பு பரப்பு முழுவதும் பழமரம் நடப்பட்டு, மானா வாரி தரிசாக இருந்த நிலம் மீண்டும் வேளாண் சாகுபடிக்கு கொண்டு வரு வதின் வாயிலாக சாகுபடி பரப்பினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேற்கூறிய அரசு மானிய திட்டங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறுமாறு அறிவித்தினார்.

Tags:    

Similar News