உள்ளூர் செய்திகள்

வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி விவசாயம் செய்து தென்னை மரத்தில் அதிக தேங்காய் பிடித்துள்ளதை படத்தில் காணலாம்.

தென்னை சாகுபடி விவசாயிகள் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

Published On 2022-10-07 09:29 GMT   |   Update On 2022-10-07 09:29 GMT
  • வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜ கோபால், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தென்னையில் காய்ப்புத்தி றனை அதி கரிக்கவும், எண்ணெய் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வைத் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டம், பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி, உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் தென்னையில் நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்கள் ஊடுபயிர்சாகுபடி குறித்த செயல் விளக்கதிடல் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது.

தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் தென்னை வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News