உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஒரு வாரமாக பூட்டி கிடக்கும் கூட்டுறவு சங்கங்கள்-பயிர் கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு

Published On 2023-10-10 05:35 GMT   |   Update On 2023-10-10 05:35 GMT
  • கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திற னாளி கடன், மகளிர் குழுவிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த சங்கங்களில் அட மானம் வைத்துள்ளவர்க ளின் கடன்கள் அடிக்கடி அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் அதற்குரிய தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகின்றனர். இதனால் டெபாசிட் தாரர்களுக்கு முதிர்வு தொகையை கூட வழங்க முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் ரேசன் கடை ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவை கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த தொகையை அரசு ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனி டையே டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன், லாரிகள், சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்.

கிட்டங்கிகள் கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களை அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருகின்ற னர். இதற்கு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட த்தில் 198 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு ள்ளன. இதனால் பயிர் கடன், நகை கடன் மற்றும் உரம் வினியோகம் ஆகி யவை கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஐ.சி.டி.பி., ஆர்.ஐ.டி.எப். அக்ரோ சர்வீஸ் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் டிராக்டர் மற்றும் விவசாய உபகரண ங்கள் வாங்கப்பட்டன. கிடங்குகளும் கட்டப்பட்டன. தற்போது அவை பயன்பாட்டில் இல்லாததால் கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல தற்போதும் எந்திரங்கள் வாங்கவும், கிடங்குகள் கட்டவும் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவு செய்ய நேரிடும். இதனால் சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News