உள்ளூர் செய்திகள்

மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் :தொழிலாளர்கள் வேலை இழப்பு

Published On 2023-02-03 09:37 GMT   |   Update On 2023-02-03 09:37 GMT
  • ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.
  • ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓசூர், 

தமிழ்நாட்டில் பல வண்ணங்கள், அமைப்பு களில் பரந்த அளவிலான கிரானைட் கற்கள் கிடைப்பதால் ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.

இத்தொழிலில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா்.

கிரானைட் தொழிற்சா லைகள் சிறந்த முறையில் இயங்க அதன் அருகில் குவாரிகள் இருப்பதும், தரமான கிரானைட் கற்கள் எளிதில் கிடைப்பதை பொறுத்ததாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குவாரிகள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அரசின் சட்ட சிக்கல்களால் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக தேவையான கிரானைட் கற்கள் கிடைக்காததால் நவீன கல் அறுப்பு இயந்திரங்கள் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செயல்படு கின்றன. இதன் விளைவாக தொழிற்சாலைகளில் பணியாளா்கள் குறைக்கப்படு கின்றனா்.

பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கிரானைட் தொழிற்சா லைகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கிரானைட் கற்கள் எளிதில் கிடைக்காதலால் வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் வாங்குவதால் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் சாத்தியமில்லை.

இந்தத் தொழில் நலிவடைந்து வருவதால் கடந்த ஓராண்டில் சுமாா் 5000 தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். பல கிரானைட் யூனிட்கள் தமிழ்நாட்டிலிருந்து ராஜஸ்தானுக்கு இடம் பெயா்கின்றன.

இந்த இடம்பெயா்வு காரணமாக ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிரானைட் குவாரிகள் செயல்படாததாலும், கிரானைட் பதப்படுத்தும் யூனிட்கள் ஓரளவே செயல்படுவதாலும் அரசுக்கு ரூ. 5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கிரானைட் உற்பத்தியாளா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News