உள்ளூர் செய்திகள்

தூய்மை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்.

கொடைக்கானலில் தூய்மை விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-30 11:04 IST   |   Update On 2022-07-30 11:04:00 IST
  • “பசுமை இந்தியா தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல், மறுசுழற்சி ஆகியவை குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் சார்பில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு "பசுமை இந்தியா தூய்மை இந்தியா" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி, அண்ணா சாலை வழியாக, மூஞ்சிக்கல்லில் நிறைவுற்றது. பேரணியை தலைமையேற்று நடத்திய துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் மரம் வளர்த்தல், தூய்மையை பேணுதல், பிளாஸ்டிக் ஒழித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பதிவாளர் ஷீலா மகாத்மா காந்தியடிகளின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றுவது நம் கடமை என்று ஊக்குவித்தார். கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் கொடைக்கானலின் தூய்மை பணிகள் பற்றி எடுத்துரைத்து, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பணிகளைப் பாராட்டினார்.

பின்னர் 3 பேரும் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல், மறுசுழற்சி ஆகியவை குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பேராசிரியர்கள் ராஜம், ஜெபராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியை ஜோஸ் கவிதா மற்றும் தாமரைச் செல்வி ஒருங்கிணைத்து நடத்தினர்.

Tags:    

Similar News