உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2022-10-18 15:43 IST   |   Update On 2022-10-18 15:43:00 IST
  • நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
  • இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

மேட்டூர்:

மேட்டூர் நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று காலை மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளது. இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News