உள்ளூர் செய்திகள்
9-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
- மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூர் அருகே உள்ள கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவ ரது மகன் லோகித் (வயது14). இவர் பாலக்கோடு அருகே செல்லியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி, 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்தார். திருவிழா முடிந்த பின்னர் லோகித்தை பள்ளி செல்ல அவரது தந்தை வற்புறுத் தியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.