உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் மோதல்

Published On 2023-03-23 14:53 IST   |   Update On 2023-03-23 14:53:00 IST
  • பதில் அளிக்காததால் அருகில் இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்மார்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
  • ஆபாசமாக பேசியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்நடைப்பெற்றது.

நேற்று காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஊராட்சி களில் நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு, குடிநீர் பிரச்சனை, சாக்கடை கால்வாய்,தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பெண் தலைவர்கள் உரிய பதில் அளிக்காததால் அருகில் இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்மார்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாக பேசியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்கோடு ஒன்றியத்தில் பெண்கள் தலைவியாக உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கணவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதனை தமிழகஅரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News