உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு - 25 பேர் மீது வழக்கு

Published On 2023-03-12 08:44 GMT   |   Update On 2023-03-12 08:44 GMT
  • ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
  • அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இத் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பிபேட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அங்கு இருந்த பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் தாக்கி அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இந்த மோதலில் தம்பிபேட்டை சேர்ந்த அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பி பேட்டைைய சேர்ந்த செந்தமிழ் செல்வன், வீர பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே மோதலை தடுக்க சென்ற போலீசாரின் ஜீப் கண்ணாடி உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

Tags:    

Similar News