உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்.

திண்டிவனம் அருகே 2 அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

Published On 2022-12-01 12:59 IST   |   Update On 2022-12-01 12:59:00 IST
  • திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை.
  • மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திண்டிவனம் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை. மேலும் தற்போது ஆவணிப்பூரில் இருந்து வரும் பஸ்களும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராம த்திற்கு வரவில்லை. மாலை நேரங்களில் பஸ் சரி வர வராததால் இரவு 8 மணிக்கு மேல் பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால் ஆவணிப்பூரில் இருந்து வந்த பஸ்சையும், அதேபோல திண்டிவனத்தில் இருந்து ஆவணிப்பூர் வந்த 2 அரசு பஸ்சையும் சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 அரசு பஸ்சையும் சிறைப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News