உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி அளிக்க வேண்டும்- வாரியம் அமைக்க வலியுறுத்தி சிலம்ப ஆசான்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-16 15:13 IST   |   Update On 2023-04-16 15:13:00 IST
  • அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்கவேண்டும்.
  • திறமையான ஆசான்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

சென்னை:

உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணை தலைவர், அகத்தியா, அ. ஞானம், இணை செயலாளர் ராஜா, பொருளாளர் ராஜவேலு, துணை செயலாளர்கள் விஜயன், அருண் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆர். முருககனி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.வி.எஸ். குரூப்பின் நிறுவனர் டாக்டர். சி.எம்.சாமி கலந்துகொண்டார். சிலம்ப ஆசான்கள் கிருஷ்ண சாமி,சண்முகம் , குரு ஏழுமலை. கண்ணன். பவர் பாலாபாலசேகர், சௌந்தர்,முகமது அப்துல்காதர், பரசுராமன், விஸ்வநாதன், ராஜன், சண்முகராஜா, சரவணன், வில்சன், ரிஷ்வான் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசை வலியுறுத்தி சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும், அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்கவேண்டும், சிறந்த மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர ஊதியமும், திறமையான ஆசான்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிலம்ப மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிலம்பம் ஆடியபடி தங்களின் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News