குருபராத்தப் பள்ளி முதல் குண்குறுக்கி வரையிலான அமைக்கபட்ட புதிய தார்சாலையை படத்தில் காணலாம்.
சூளகிரி 3-வது சிப்காட்டிற்கு சாலை புதிதாக அமைப்பு
- சில ஆண்டுக்கு முன்பே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 21-ம் தேதி நேரில் வந்து பார்வையிட்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கோனேரி பள்ளி ஊராட்சி, குண்டு குறுக்கி சுற்று வட்டார பகுதி யில் மூன்றாவது சிப்காட் அமைக்க சில ஆண்டுக்கு முன்பே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை குருபராத்தப் பள்ளியில் இருந்து குண்டு குறுக்கி செல்லும் சாலை மிக பழுதாகி இருந்தது. இதனை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 21-ம் தேதி நேரில் வந்து பார்வையிட்டார்.
சிப்காட் பகுதியையும் பார்வையிட்டு தற்போது இந்த சாலையை தரமான சாலையாக அமைத்து தரவேண்டும் என மாவட்ட பொறியாளர் மாதுவையும், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் பொறியாளர்கள் சுமதி சியாமளா ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
உடன் கோனேரிப் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபம்மா சக்கரளப்பா, துணைத் தலைவர் புஷ்ப்பராஜ், மேற்பார்வையாளர்கள் சிற்றரசு, மற்றும் ஊராட்சி செயலாளர் விஜி மற்றும் பலர் இருந்தனர்.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ரூ.98 லட்சத்து 850 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஓதுக்கிடு செய்து சில தினத்தில் தார்சாலை அமைத்து தந்ததால் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.