உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

அரசு பள்ளியில் சோழமண்டல செஸ் போட்டி

Published On 2022-09-19 10:01 GMT   |   Update On 2022-09-19 10:01 GMT
  • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • 9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தகட்டூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் சோழமண்டல செஸ் போட்டி நடைபெற்றது.

போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது. செஸ் போட்டியினை வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு செஸ் கமிட்டி இணைச் செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நாகை மாவட்ட இணைச்செயலாளர் மணிமொழி, பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன், சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா, ஆசிரியர்கள் சுப்ரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை கதிர்வேல் உள்ளிட்ட 11 நடுவர்களை கொண்டு செஸ் போட்டி நட த்தப்பட்டது. போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ், நூல்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

வேதாரண்யத்தில் 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News