உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில் ரதவீதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்ற மேயர் உத்தரவு

Published On 2023-04-25 12:43 IST   |   Update On 2023-04-25 12:43:00 IST
  • தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டு தருமாறும் மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
  • தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாகம்பிரி யாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

மேயர் ஆய்வு

இதனையடுத்து தேரோட்ட விழா அழைப்பி தழை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மேயர் ஜெகன் பெரிய சாமியை மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர். அப்போது வருகிற 3-ந்தேதி நடை பெறும் தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டும் தருமாறு மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

அப்போது அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, அதற்கான பணிகளை நிறை வேற்றிட அப்பகுதிகளை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர் கனகராஜ், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட பிரதி நிதி ராஜ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்த னர்.

Tags:    

Similar News